டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,698 ஆக உயர்ந்து 3025 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 5049 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 94,698 ஆகி உள்ளது. நேற்று 182 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3025 ஆகி உள்ளது. நேற்று 2538 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 36,795 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,872 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2347 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,053 ஆகி உள்ளது நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 1198 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 600 பேர் குணமடைந்து மொத்தம் 7688 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 391 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,380 ஆகி உள்ளது இதில் நேற்று 34 பேர் உயிர் இழந்து மொத்தம் 659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 191 பேர் குணமடைந்து மொத்தம் 4499 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 639 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,224 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 79 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 634 பேர் குணமடைந்து மொத்தம் 4172 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 422 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,755 ஆகி உள்ளது. நேற்று 19 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 148 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 276 பேர் குணமடைந்து மொத்தம் 3202 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 242 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,202 ஆகி உள்ளது இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 131 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 111 பேர் குணமடைந்து மொத்தம் 3055 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது டமன் டையு தாத்ரா நாகர் ஹவேலி யுனியன் பிரதேசங்கள்,, அருணாசல பிரதேசம், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.