டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,768 ஆக உயர்ந்து 2294 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 3591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 70,768 ஆகி உள்ளது.  நேற்று 81 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2294 ஆகி உள்ளது.  நேற்று 1579 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 22,549 ஆகி உள்ளது.  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43,976 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1230 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,401 ஆகி உள்ளது  நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 868 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 587 பேர் குணமடைந்து மொத்தம் 4786  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 347 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,542 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 513 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 238 பேர் குணமடைந்து மொத்தம் 2780 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 798 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,002 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 53பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 92  பேர் குணமடைந்து மொத்தம் 2051  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 310  பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,233 ஆகி உள்ளது நேற்று யாரும் ம்ரணம் அடையவில்லை.  இதுவரை மொத்தம் 73 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 60 பேர் குணமடைந்து மொத்தம் 2129 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 174 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,988 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 113 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 83 பேர் குணமடைந்து மொத்தம் 2324 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.