டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,44,950 ஆக உயர்ந்து 4172 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 6414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,44,950 ஆகி உள்ளது. நேற்று 148 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 4172 ஆகி உள்ளது. நேற்று 3012 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,706 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,061 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2436 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 52,667 ஆகி உள்ளது நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 1695 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1186 பேர் குணமடைந்து மொத்தம் 15,786 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,082 ஆகி உள்ளது இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 119 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 407 பேர் குணமடைந்து மொத்தம் 8731 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 405 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,468 ஆகி உள்ளது இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 888 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 224 பேர் குணமடைந்து மொத்தம் 6636 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 635 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,053 ஆகி உள்ளது. நேற்று 15 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 276 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 231 பேர் குணமடைந்து மொத்தம் 6771 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 272 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,300 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 165 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 208 பேர் குணமடைந்து மொத்தம் 4056 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.