டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,475 ஆக உயர்ந்து 3302 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 6148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,06,,475 ஆகி உள்ளது.  நேற்று 146 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3302 ஆகி உள்ளது.  நேற்று 3032 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,309 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,858 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2078 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 37,136 ஆகி உள்ளது  நேற்று 76 பேர் உயிர் இழந்து மொத்தம் 1325 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1202 பேர் குணமடைந்து மொத்தம் 8639 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 688 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,448 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 85 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 489 பேர் குணமடைந்து மொத்தம் 4895  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 395 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,141 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 719 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 239 பேர் குணமடைந்து மொத்தம் 5043 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 500 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,554 ஆகி உள்ளது.  நேற்று 6 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 166 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 265 பேர் குணமடைந்து மொத்தம் 4752 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 338 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,845 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 143 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 119 பேர் குணமடைந்து மொத்தம் 3337 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது டமன் டையு தாத்ரா நாகர் ஹவேலி யுனியன் பிரதேசங்கள்,, அருணாசல பிரதேசம், மேகாலயா,  மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், லடாக் ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.