டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,85,792 ஆக உயர்ந்து 17,410  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 
நேற்று இந்தியாவில் 18,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 5,85,292 ஆகி உள்ளது.  நேற்று 506 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 17,410 ஆகி உள்ளது.  நேற்று 12,565 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,47,839 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,20,477 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 4,878 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,74,761 ஆகி உள்ளது  நேற்று 245 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,855 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,951 பேர் குணமடைந்து மொத்தம் 90,911  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 3,943 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 90,167 ஆகி உள்ளது  இதில் நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 1201 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,325 பேர் குணமடைந்து மொத்தம் 50,074 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 2,199 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 87,360 ஆகி உள்ளது  இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,742 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,113 பேர் குணமடைந்து மொத்தம் 58,348 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 620 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,643 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,848 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 422 பேர் குணமடைந்து மொத்தம் 23,670 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 664 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,492 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 697 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 578 பேர் குணமடைந்து மொத்தம் 16,084 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.