டில்லி

மய மலையின் உச்சியில் அமைந்துள்ள லடாக் செல்லும் முக்கிய சாலைப் பணியை இந்திய அரசு முடித்துள்ளது.

இந்திய எல்லையில் உள்ள இமயமலை பகுதியில் அமைந்துள்ளது லடாக். இந்த பகுதிக்கு செல்ல சரியான சாலைகள் இல்லாமல் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் செங்குத்தான மலை ஏற்றம் மற்றும் அபாயகரமான பள்ளத்தாக்குகளும் ஆகும். இங்கு சாலை இல்லாததால் ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

அதை ஒட்டி பல முறை இங்கு சாலைகள் அமைக்க முயன்றும் முடியாமல் போனது. கடண்டஹ் 2000 மற்றும் 2012 ஆம் வருடத்தில் ஒரு தற்காலிக சாலை அமைக்கப் பட்டு அதுவும் சில நாட்களில் இடிந்து விழுந்தது. ஆகவே நிரந்தர சாலை அமைக்கும் திட்டத்தை அரசு தொடங்கியது. இம்முறை சுமார் 160 கிமீ அதிக தூரம் கொண்ட சாலை நீரால் அடித்துச் செல்ல முடியாதபடி அமைகக திட்டமிடப்பட்டது.

தற்போது லே – டர்புக் – ஷவோக் வழியாக லே மற்றும் கரகோரம் கணவாய் வரை சாலைகள் அமைக்கப்பட்ட இந்த பணி முழுமையாக முடைவடைந்துள்ளது. இந்த சாலையின் இடையில் பல நதிகள் செல்வதால் 37 பாலங்கள் அமைக்கபட்டுள்ளன. இந்த சாலையில் சுமார் 235 கிமீ தூரத்தில் யாரும் வசிப்பதில்லை. ஷயோக் என்னும் சிற்றூருக்கு மேல் பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது.

இந்த புதிய சலையினால் இந்திய ராணுவத்தினர் எளிதாக எல்லை வரை செல்ல முடியும். அத்துடன் சீன எல்லையில் இருந்து வரும் ஜிவான் நல்லா சிப் சாப் ஆறு ஆகியவைகளை சுலபமாக கடக்க முடியும். அத்துடன் இந்த சாலையின் இடையில் விமான படை வீரர்கள் பயிற்சிக் கூடமும் அமைக்கப்பட உள்ளது.