உலக கோப்பை வில்வித்தை: இந்திய அணி தங்கம் வென்று சாதனை!

Must read

சீனா,

லக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

உலக கோப்பை வில்வித்தை போட்டி  சீனாவில் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இறுதி போட்டியில் நுழைந்து விளையாடியது.

இந்த போட்டியில் பலம் வாய்ந்த கொலம்பியாவை சந்தித்தது.

இந்திய அணியை சேர்ந்த அபிஷேக் வர்மா, சின்னா ராஜு ஸ்ரீதர் மற்றும் அமன்ஜீத் சிங் ஆகியோர் அபாரமாக விளையாடி கொலம்பியாவை தோற்கடித்தது.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ, அமான்ஜித் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய வில்வித்தை அணி அரையிறுதியில் 232க்கு 230 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கொலம்பியாவை சந்தித்து வெற்றி பெற்றவது.

ஏற்கனவே நடைபெற்ற ஆடவர் ஒற்றையர், போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தீபிகாகுமாரி ஜப்பான் வீராங்கணையிடம் தோற்று போனார் .

இதே போல் மகளிர் அணியும் லீக் போட்டியில் தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில் இந்திய ஆண்கள்  வில்வித்தை அணி இறுதி போட்டிக்கு முன்னேறி  வெற்றி பெற்றுள்ளது.

 

More articles

Latest article