ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா மிர்ஷா ஜோடி

Must read

சானியா மிர்ஷா -மார்ட்டினா ஹிங்கிஸ்

ரோம்,

த்தாலியில் நடைபெற்று வருஐம்  டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்த தொடரில் உலகின் பல்வேறு முன்னனி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ரஃபேல் நடால் ஆஸ்திரியா நாட்டு வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீனஸ் வில்லியம்ஸ்சும் காலிறுதியில் தோல்வியுற்று வெளியேறினார்.

இதேபோல் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி பிரான்சு இணையுடன் போராடி தோற்றது.

அதேநேரம் மகளிர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா ஜோடி இத்தாலி இணையை 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் போட்டியில் சானியா மிர்ஷா ஜோடி, பலம் வாய்ந்த மார்ட்டினா ஹிங்கிஸ் இணையுடன் மோதுகிறது.

More articles

Latest article