டெல்லி :

ந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பரஸ்பர பாதுகாப்பு பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சிகளை எளிதாக்குவதற்காக ஒருவருக்கொருவர் இராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் – பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தம் (Mutual Logistics Support Agreement) என்று அழைக்கப்படுகிறது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையில் இன்று நடந்த மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது இது எட்டப்பட்டது. இது இராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்களை எரிபொருள் நிரப்பவும் பராமரிப்பு வசதிகளை அணுகவும் அனுமதிக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியா ஏற்கனவே இதே போன்ற உடன்பாட்டைக் கொண்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் “குவாட்” (“Quad”) என்ற கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் யு.எஸ் மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்தியா கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளது, இதில் ஆஸ்திரேலியா இடம்பெறுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.