ரெமெடிவிர் மருந்து, கடந்த மாதம் யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும், ஜப்பானிய சுகாதார கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. தற்போது இந்தியாவும் அங்கீகரித்துள்ளது.

COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஐந்து டோஸ்கள் வரை பயன்படுத்த, அவசரகால பயன்பாடாக, “கிலியட் சயின்சஸ் இன்க்” – இன் ஆன்டிவைரல் மருந்து ரெமெடிசிவருக்கு ஒப்புதல் அளித்ததாக இந்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது, முறையான மருத்துவ பரிசோதனைகளின் மூலம், COVID-19 நோயாளிகளுக்கு அளிக்கப்பட சிகிச்சையில், சரியான அளவில் முன்னேற்றம் காண்பிக்கும் முதல் மருந்து என்று அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஏதும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து இல்லாத COVID-19 க்கு எதிரான போரில் இம்மருந்தே முன்னணியில் உள்ளது. கடந்த மாதம் யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இந்த மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், ஜப்பானிய சுகாதார கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்த மருந்து சில நாடுகளில் கருணையுள்ள பயன்பாட்டு விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

“ஜூன் 1 ம் தேதி,  ரெம்டெசிவிர் மருந்து, ஐந்து டோஸ்கள் வரை பயன்படுத்தலாம் என்ற நிபந்தனையுடன் அவசரகால பயன்பாட்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது” என்று இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐந்து நாள் அடங்கிய சிகிச்சையின் தொகுப்பில், மிதமான COVID-19 நோயாளிகளுக்கு, ரெமெடிசிவிர் மருந்து குறிப்பிடத்தக்க நன்மையைக் காட்டியதாக யு.எஸ். மருந்து தயாரிப்பாளர் தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஒப்புதல் வந்துள்ளது.

கடுமையான COVID-19 உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒப்புதல் நேரத்தில் வழங்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இம்மருந்தின் பயன்பாட்டை 10 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு எதிராக கட்டுப்பாட்டாளர் முடிவு செய்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை கிலியட் நிறுவனம் வழங்கவில்லை.

இந்த நிறுவனம் கடந்த மாதம் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட ஐந்து பொதுவான மருந்து தயாரிப்பாளர்களுடன் சிப்லா லிமிடெட் மற்றும் ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் லிமிடெட் ஆகியவற்றுடன் பிரத்தியேகமற்ற உரிம ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் 198,706 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.  மேலும் 5,598 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் https://www.mohfw.gov.in இல்  பதிவிடப்பட்ட தகவல்கள் காட்டியுள்ளன.

உலக நாடுகள் அனைத்தும் கோவிட்-19 சிகிச்சைக்கு போட்டியிடுவதால் இந்த மருந்திற்கு உலகளாவிய போட்டி கடுமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில்: லயா