சென்னை:

விண்வெளி துறையில்  உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், மற்றொரு வியத்தகு சாதனையை நிகழ்த்தி, உலக வல்லரசு நாடுகளில் நாங்களும் இருக்கோம்ல… ன்று மார்தட்டிள்ளது இந்தியா.

புவி சுற்றுவட்டப் பாதையில் 300 கி.மீ தொலைவில் சுற்றிய செயற்கைக்கோள் ஒன்றை,  தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை மூலமாக (ASAT) மூன்று நிமிடங்களில் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளது இந்திய விண்வெளித்துறை.

ஏற்கனவே 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் ஆராய்ச்சி அமைப்பான, DRDO, வெளியிட்ட ஒரு அறிவிப்பில், எதிரிநாட்டு செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்க கூடிய அளவுக்கு தேவைப்படும், தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்திருந்தது. அதையடுத்து 2012ம் ஆண்டே சோதனை நிலையில், தற்போது செயல்படாத செயற்கைக்கோளை  வெற்றிகரமாக  தாக்கி அழித்து சாதனை புரிந்துள்ளது.

இதுபோன்ற ஏவுகணைகள் இதுவரை  அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகளிடம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

ஆனால், ஏசாட் வகை ஏவுகணையை 1958ம் ஆண்டிலேயே, அமெரிக்கா சோதித்து பார்த்து வெற்றி கண்டது. ஐக்கிய சோவியத் ரஷ்யா 1964ம் ஆண்டு இந்த சோதனையை நடத்தியிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2007ல் சீனா இந்த சாதனையை செய்த நிலையில், 2019ல் இந்திய பாதுகாப்புத்துறையும், இந்த எலைட் க்ளப்பில் இந்தியா சேர்ந்த நிலையில், தற்போது இந்திய விண்வெளித்துறையும் சாதனை படைத்துள்ளது.

தற்போது விண்வெளியில் பல நாடுகள் தங்களது தேவையான ஏவுகணைகளை செலுத்தி வருவதாலும், அங்கு செயலிழந்து கிடக்கும் செயற்கை கோள்களை அழிக்கும் வகையிலும், இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு மந்திரி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) தலைவர் விஜய் சரஸ்வத்  கூறும்போது,  ‘இந்த செயற்கைகோள்,  சுற்றுப்பாதையில் விண்வெளி செயற்கைக்கோள்களை இலக்கு வைத்து அழிக்க வல்லது இந்தியா என்று கூறினார்.

ஏற்கனவே இதுபோன்று 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஒரு சீன ஏவுகணை ஒரு பயன்படுத்தப் படாத வானிலை செயற்கைக்கோள் அழித்தது என்று கூறியவர்  சீனாவின் ஆபத்தான சோதனையே, இந்தியாவையும் இதேபோன்ற செயற்கைக்கோள் தயாரிக்கும் வேட்கையை தூண்டியது என்று கூறினார்.

ஏற்கனவே 5,500 கிமீ  அளவிலான தூரத்தை கடந்து தாக்கும் அக்னி வி இடைநிலை ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக கடந்த ஆண்டு  ஏப்ரல் 19ந்தேதி  சோதனை நடத்தப்பட்டது. அது வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில்  மற்றொரு நடவடிக்கையாக   இந்த ஏவுகணை வளிமண்டலத்தில் சுமார்  600 கி.மீ. உயரத்துக்கு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டதாக கூறி உள்ளார்.

ஆனால், மோடியோ, தற்போது நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு, ஏசாட் ஏவுகணையை வைத்து அரசியல் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியோ, நாடக தின வாழ்த்துக்கள் என்று கூறி, மோடி நடிப்பதாக பதிவிட்டு உள்ளார்.