அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் இந்நிலையில் இந்த படத்தில் மேயாத மான் புகழ் இந்துஜா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.