கேரள சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கூட்டனியில் இணைந்து அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
மனுக்களை பூர்த்தி செய்வதில் தவறு ஏற்பட்டதால், தலச்சேரி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் ஹரிதாஸ் மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.
இதேபோல் குருவாயூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நிவேதிதா மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த கட்சிகளின் டம்மி வேட்பாளர்கள் மனுவும் தள்ளுபடி ஆனதால், இரு தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வில்லை.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவிகுளம் தொகுதி, பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தனலட்சுமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் கணேஷ் என்பவர் டிக்கெட் கேட்டிருந்தார். அவருக்கு சீட் கொடுக்க வில்லை.
இதனால் சுயேச்சை வேட்பாளராக கணேஷ் மனு செய்துள்ளார்.
அவரை நேற்று இரவு அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர வைத்துள்ளனர்.
தேவிகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அவரை அறிவிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
– பா. பாரதி