துரை

சுயேச்சை வேட்பாளரான சங்கர பாண்டியன் மதுரை வடக்கு தொகுதியில் தாலிக்கயிறு, காலி மது பாட்டில்களுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.    கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிக்கைகள் பிரபலமாகப் பேசப்பட்ட போதும் அவற்றில் மதுக்கடைகள் மூடல் பற்றி தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் சங்கர பாண்டியன் ஊர்வலமாக வந்துள்ளார்   அவர் காலி மது பாட்டில்கள் மாலை அணிந்து ஒரு தாம்பாள தட்டில் தாலிக்கொடி,  சிறிது ரூபாய் நோட்டுக்களை எடுத்து வந்துள்ளார்.   அவரை காவல்துறையினர் அலுவலக வாசலில் நிறுத்தினர்.

அலுவலகத்துக்குள் காலி மது பாட்டில்கள் அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டதால் சங்கர பாண்டியன் மட்டும் சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  அவர் செய்தியாளர்களிடம், “இந்த தேர்தலில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப் போட்டியிட உள்ளேன்.

மது பெண்களின் தாலியை அறுக்கக் காரணமாக உள்ளது.  அதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும் வாக்கு அளிக்க பணம் வாங்குவது தவறு என்பதைச் சுட்டிக் காட்டவும் நான் இவ்வாறு ஊர்வலமாக வந்தேன்” என்க குறிப்பிட்டுள்ளார்.