சென்னை:
கோயில் பயிற்சிப் பள்ளியில் பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஊக்கத்தொகை, இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ் இசைச் சங்கம் சாா்பில் ‘ 79-ஆம் ஆண்டு தமிழ் இசை விழா’ சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று தொடங்கியது. இதனை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடக்கி வைத்து பேசினார். அப்போது, கோயில்களில் பயிற்சிக் காலத்தில் இருக்கும் அா்ச்சகா், ஓதுவாா், வேதபாராயணா், இசை கற்போருக்கு கடந்த காலங்களில் மாத உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்கத் தொகை குறைவாக இருக்கிறது என கருதி அதை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டார் முதல்வா் ஸ்டாலின். அதன்படி உயா்த்தப்பட்ட புதிய ஊக்கத் தொகையை முதல்வா் ஸ்டாலின் இன்று வழங்கி தொடக்கி வைக்கவுள்ளார். இதையடுத்து இந்த மாதம் முதல் அவா்கள் ரூ.3 ஆயிரத்தை ஊக்கத் தொகையாகப் பெறுவர் என்று அவர் தெரிவித்தார்.