சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உதவித்தொகை உயர்வு குறிப்பிட்ட  5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை  உயர்த்தியும், அதற்கான நிதிஉதவியும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . அதனப்டி,  5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ .1,500லிருந்து ரூ 2,000ஆக உயர்ந்துள்ளது.

மனவளர்ச்சி குன்றியவர்கள்,  தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், தண்டுவட மரப்பு நோய் ஆகிய பாதிப்புடையவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

இதன்மூலம்  2,15,505 பேர் பயன்பெறுவார்கள் என்றும், இதற்கான  பராமரிப்பு உதவித்தொகை உயர்த்த ரூ 31.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.