சென்னை – சேலம் இடையேயான விமான சேவையை வாரம் மூன்று நாட்கள் தினமும் 2 விமான சேவையாக அதிகரிக்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10:35 மணிக்கும் மீண்டும் மாலை 3:35 மணிக்கும் சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

சேலத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்கும் மீண்டும் மாலை 5 மணிக்கும் சென்னை நோக்கி விமானம் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் முன்பதிவு வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் – சென்னை இடையேயான விமான போக்குவரத்து கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் இந்த சேவையை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார்.

சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான போக்குவரத்து துவங்கியது… தமிழக அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தனர்…