கடலூர்: அமைச்சர் எம்.சி.சம்பத்தின் நண்பர்கள், உறவினர்கள்  வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் எம். சி. சம்பத்  சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமம். இவர் கடலூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.  இவரது சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய உள்ளதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, அவருக்கு நெருக்கமானவர்களின்  இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் மாதம் 6ம் தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வழங்கப்படுவதை தடுக்கும் நோக்கில், பறக்கும் படை அமைத்து சோதனை நடத்துகிறது. மேலும் வருமான வரித்துறையும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அதேசமயம், தேர்தல் ஆணையமும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனைகளை நடத்தி பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், கடலூரில் உள்ள எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர் பாலகிருஷ்ணன், சூரப்பன் நாயக்கன்சாவடியில் அதிமுக பிரமுகர் மதியழகன், தமிழசெல்வன், மா  உள்பட மொத்தம் 8 பேருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதிமுக மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ், திமுக நகர செயலாளர் கேஎஸ் தனசேகர் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக நேற்று சோதனை நடத்தினர். அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொத்து விவரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..

Affidavit-MC Sampth

 

 

[youtube-feed feed=1]