சென்னை:

னலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி நிறுவனத்தக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனலட்சுமி சீனிவாசன் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. மேலும் பல கல்வி நிறுவனங்களை தனலட்சுமி சீனிவாசன் தரப்பினர் நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் கல்லூரிகள் மட்டுமல்லாது நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாகவும், மொத்தம் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.