சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், வருமான வரி வருவாய், 2018-19 நிதியாண்டில் 12% அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.180 கோடி கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், இந்த வரி வருவாய் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த 2017-18ம் நிதியாண்டில், ரூ.67,583 கோடி என்ற அளவில் இருந்த வருமான வரி வருவாய், 2018 – 19ம் நிதியாண்டில் ரூ.75,147 கோடி என்பதாக அதிகரித்துள்ளது. வருவாய் என்பதைத் தவிர, மதிப்பீடுகளும் ரூ.9.3 லட்சம் அதிகரித்துள்ளது.

மேலும், வருமான வரி விசாரணை அமைப்பு, பினாமி பரிவர்த்தனை சட்டம் 1988ன் கீழ், சுமார் ரூ.802 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.