சென்னை
நடிகர் ரஜினிகாந்த் வருமானத்தை மறைத்ததாக எழுந்த விவகாரத்தில் அவருக்கு ரூ 66.21. லட்சம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
கடந்த 2002 ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான நிதி ஆண்டுகளில் சரியான வருமானத்தைக் காட்டவில்லை என வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இதையொட்டி வருமான வரி தீர்ப்பாயம் ரூ.66.23 லட்சம் அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் இந்த தொகை ரூ.1 கோடிக்கும் குறைவாக இருந்ததால் வருமான வரித்துறை வழக்கைத் திரும்பப் பெற்றது.
தற்போது ரஜினிகாந்த் அளித்துள்ள கணக்குகளின் அடிப்படையில் அவர் கடந்த 2002-03 மற்றும் 2004-05 ஆகிய நாட்களில் படம் ஏதும் நடிக்கவில்லை என தெரியப்படுத்தப்பட்டது. ஆயினும் அவரிடம் நடந்த விசாரணை மற்றும் ஆய்வின்படி அவர் தனது அலுவலகம் மற்றும் வீட்டுச் செலவுகளை நஷ்டக் கணக்கில் காட்டி இருந்தது தெரிய வந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் காட்டப்படவில்லை.
மேலும் இந்த செலவுகள் விவரம் குறித்து முதலில் அளித்த வருமான வரிக்கணக்கில் காட்டப்படவில்லை என்பதாலும் இதற்கான வருமானத்தை அவர் மறைத்திருக்கலாம் என்பதாலும் அவருக்கு முதலில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை வருமான வரித்துறை வசூலிக்கும் என கூறப்படுகிறது. இந்த அபராதத் தொகை குறைந்தது ரூ.66.21 லட்சம் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.