மதுரை:  தமிழக அரசின் ஒப்பந்தங்களை எடுத்து பணி செய்துவரும் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரசு பணிகள் ஒப்பந்தம் விடப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்களை எடுத்து பணி செய்ய ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள் எந்தவொரு ஆட்சி அமைந்தாலும், அதற்கேற்றவாறு தங்களை மாற்றிகொண்டு அரசு ஒப்பந்தங்களை பெற்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற ஒப்பந்தங்களை பெற அவர்கள், ஆட்சியாளர்களுக்கு கமிஷம் கொடுப்பது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் உள்ளன. இதுபோன்ற புகார்கள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி . இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் அரசு ஒப்பந்தங்கள் விவகாரம் விமர்சனங்களைத் கொண்டுள்ளன.

இந்த நிலையில், மதுரை, திண்டுக்கல் உள்பட சில மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்ளும்  சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 13ந்தேதி அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ரெய்டின்போது கணக்கில் வராத ரூ.500 கோடி சிக்கியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.