சென்னை மற்றும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பிரபல இரும்புப்பொருள் தயாரிக்கும் தொழில்நிறுவனத்திற்குச்சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (18.08.2025) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.   வரி ஏய்ப்பு புகாரின் பேரில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டரார்க் பில்டிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட் என நிறுவனம்,  1983 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும்,    உயர்நிலை உலோக உட்புறப் பொருட்கள் சந்தையில் ஈடுபட்டுள்ளது. இன்டரார்க் உலோக கூரைகள் முதல் பிளைண்ட்ஸ், உலோக கூரை வரை முன் பொறியியல் கட்டிடங்கள் வரை தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் பல இடங்களில் உள்ளது. மேலும் தயாரிப்பு  ஆலைகளும் உள்ளன.  இந்த நிலையில் நிறுவனத்தின் மீதான வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து இன்று அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை நடைபெற்று வருகிறது.