சென்னை: வருமான வரி முறைகேடு தொடர்பாக, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அவருக்கு சொந்தமான குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை உள்பட அவருக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, திமுக எம்.பி. ஜெகத்ரட்சன் மீது, கடந்த 2020ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த நிலையில், இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் ஜெகத்ரட்சகன். இவருக்கு சொந்த இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ஜெகத்தரட்சனுக்கு சென்னை குரோம்பேட்டையில் ரேலா என்ற பெயரில் மருத்துவ மனை மற்றும் மருத்துவக்கல்லூரி உள்பட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. இவர் முறையான வருமான வரி கட்டால் முறைகேடு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்கனின் வீடு, ரேலா மருத்துவமனை உள்பட அவருக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
[youtube-feed feed=1]