குஜராஜ்: 
ருமான வரித் துறை அதிகாரியாக இருந்து விஆர்எஸ் பெற்று  சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த சூரத் பாஜக பிரிவு துணைத் தலைவர் பிவிஎஸ் ஷர்மாவின் வீட்டில் வருமான வரித்துறை நேற்று திடீர் சோதனை நடத்தியது.
இந்த வாரம் புதன்கிழமை பிவிஎஸ் ஷர்மா, 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பின் போது, சில வருமான வரித்துறை அதிகாரிகள், நகை கடைக்காரர்கள் மற்றும் பட்டய கணக்காளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று முதலில் அவர் வீட்டிலேயே வருமான வரித்துறை சார்பில் சோதனை நடந்தது, பிப்ளோட் பகுதியில் உள்ள திரு ஷர்மாவின் குடியிருப்பில் நேற்று அதிகாலை முதலே சோதனை துவங்கியது. மேலும் இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் சோதனையால் பதற்றமடைந்த பிவிஎஸ் ஷர்மா தனது குடியிருப்பின் அருகே இருந்த சாலையில் அமர்ந்தார்.  குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளரும் ஊடக ஒருங்கிணைப்பாளருமான பிரசாந்த் வாலா திரு ஷர்மாவின் பிரச்சினை குறித்து கட்சி தகுந்த நேரத்தில் கருத்து தெரிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சூரத் பாஜக தலைவர் நிதின் பஜியாவாலாவும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, இதுகுறித்து நான் தற்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.