தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கிளை நிறுவனங்கள், 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தமிழக அரசின் பொது விநியோக திட்டத்திற்கு உணவுப்பொருட்களை சப்ளை செய்யும் அருணாச்சலம் இம்பேக்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மண்ணடி அலுவலகத்தில் சோதனை நடந்தது. மேலும் பருப்பு, பாமாயில் சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பி.டி.எஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வந்த புகாரை அடுத்து வருமானவரித்துறை சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.