டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, போராட்டம் நடத்தக்கூடாத என பாராளுமன்ற செயலகம் சமீபத்தில் தடை விதித்த நிலையில், அதை மீறி, இன்று  நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் ராகுல்காந்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ந்தேதி (நேற்று) தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவை எதிர்த்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டிஸ் கொடுத்துள்ளனர். அதை விவாதிக்க நாடாளுமன்ற சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், எதிர்க்கட்சியிளர் அமளியில் ஈடுபட்டு நேற்று அவையை முடக்கினர்.

இந்த நிலையில், இன்று  அதிகரித்து வரும் விலை உயர்வு,  சமையல் எரிவாயு விலை உயர்வு ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள , நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் வயநாடு எம்.பி. ராகுல்காந்தியும் பங்கேற்னார்.

இந்த போராட்டத்தில், கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு, அத்தியவசிய பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவொரு போராட்டமும் நடத்தக் கூடாது என சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்காததைக் கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.