லண்டன்:

வெளிநாட்டினர் குடியேறுவது தொடர்பாக  நடைபெற்ற பொது வாக்கெடுப்பு  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி  பொதுவாக்கெடுப்பு நடத்தியது இங்கிலாந்து.

இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து  அப்போதைய பிரதமர் டேவிட் கேமருன் பதவி விலகினார்.

அதைத்தொடர்ந்து புதிய பிரதமராக தேரசா மே பதவி ஏற்றார்.

இதையடுத்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்த பிரதமர் தெரசாமே, வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கிலாந்தில் குடியேற  வருபவர்கள், குடியுரிமை பெறும் விவகாரம் அரசு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரசா மே முடிவெடுத்துள்ளார்.

வரும் ஜூன் 8ந்தேதி பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து உள்ளார்.