சென்னை:
டிட்டர் படுகொலை வழக்கில், டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் நகர், துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ஆடிட்டர் 60. அவரது மனைவி அனுராதா 55. மகள் பிரசவத்திற்காக அமெரிக்க சென்று திருப்பிய இவர்கள், இருவரையும், அவர்களது வீட்டில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் கார் டிரைவர் கிருஷ்ணா, விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்துள்ளார்.

இதற்கிடையே, பெற்றோரின் மொபைல் போன்கள் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்ததால், சந்தேகம் அடைந்த மகள் சுனந்தா, அடையாறில் உள்ள அவரது உறவினர் திவ்யாவுக்கு தகவல் கொடுத்து, வீட்டில் பார்க்க கூறியுள்ளார்.

திவ்யா வந்து பார்த்தபோது, வீடு பூட்டிக் கிடந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூட்டை உடைத்து, போலீசார் பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடைந்தன. உறவினரின் தகவல் அடிப்படையில், இந்த தம்பதிக்கு சொந்தமான மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, சூலேரிக்காடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் போலீசார் சோதனையிட்டனர்.

இதற்கிடையே, காருடன் தப்பி செல்ல முயன்ற நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணாவை, ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவருடன், கொலைக்கு உதவிய கிருஷ்ணாவின் நண்பர் ஒருவரும் பிடிபட்டார்.விசாரணையில், நகை, பணத்தை கொள்ளை அடிப்பதற்காக, மயிலாப்பூர் வீட்டில் வைத்து தம்பதியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின், காரில் உடலை எடுத்துச் சென்று, பண்ணை வீட்டில் புதைத்ததாக போலீசாரிடம் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.