மாற்றம் என்னும் வார்த்தை மட்டுமே மாறாதது என சொல்வார்கள். அது போல நம்ம ஊரு சினிமா ட்ரெண்டு பேய்ப்படத்தில் இருந்து மாறி ஜல்லைக்கட்டை நோக்கி செல்கிறது
பேய்ப்படங்கள் வரிசையில் சீரியல் போல காஞ்சனா 2, அரண்மனை 2 என வரத்தொடங்கிய படங்கள் அதற்கான ட்ரெண்ட் குறைந்ததால் அடுத்த்தை நோக்கியது. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு புதிய பாதையை காட்டியுள்ளது.
இளமி என்றொரு படம் முதலில் வெளியாகி மற்ற படங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. தற்போது ஆர்யாவை கதாநாயகனாக வைத்து அமீர் இயக்கும் ”சந்தனத்தேவன்” திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆர்யாவின் தம்பி சத்யாவும் நடிக்கிறார்.
ரேணிகுண்டா பட இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கி வரும் “கருப்பன்” படமும் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டது. இதில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மாட்டை அடக்குவது இருந்தது, ஒரு சர்ச்சையையும் உருவாக்கியது.
விஜய் நடிப்பில் உருவாகும் மெர்சல் படத்தில் அவர் 3 வேடங்களில் நடிப்பதாகவும், இந்தப்படத்தில் ஜல்லிக்கட்டுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவிக்கிறது.
விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் ”மதுர வீரன்” படமும் ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது.