கீவ்:

போர்ச் சூழலில் சிக்கித் தவிக்கும் மக்கள் அங்கு அமைதி வாக்கெடுப்பை எதிர்பார்க்கிறார்கள்.


கிழக்கு உக்ரேனிய அரசுப் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையில் 5 ஆண்டுகால மோதல் பேரழிவை ஏற்படுத்திவிட்டது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்புப் பிரிவின் கணிப்பின்படி, உக்ரேனில் 13,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இவர்களில் கால்வாசிப் பேர் அந்நாட்டின் குடிமக்கள் என்பதுதான் வேதனையான செய்தி.

உக்ரைன் அதிபர் பீட்ரோ பொரோசென்கோ ரஷ்யாவுக்கு எதிராக மீண்டும் ஒரு கடினமான அரசியல் போரை உருவாக்கினார் அதனால், நாடு எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த மோதல் இருப்பதாக உக்ரைன் மக்கள் கூறுகின்றனர்.

நாட்டின் முக்கியமாக ரஷ்ய மொழி பேசும் டோனெட்ஸ்க் பிராந்தியத்தை கலகக்காரர்கள் கைப்பற்றினர். இதனால் கடந்த 2014 தேர்தலில், பொரோஷெங்கோவை அதிகாரத்திற்குக் கொண்டுவந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அப்பகுதி மக்களால் முடியவில்லை.

2015 -ம் ஆண்டின் கோடைகாலத்தில் இப்பகுதியை அரசு துருப்புக்கள் மீட்டெடுத்தன. எனினும் இங்கு முழு அமைதி ஏற்படவில்லை.
பிரிவினைவாதிகளை முடுக்கிவிட துருப்புக்களையும் கனரக ஆயுதங்களையும் ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

எனினும், ரஷ்ய போராளிகளுக்கு அரசியல், மனிதாபிமான ஆதரவை மட்டுமே வழங்குவதாக மாஸ்கோ கூறுகிறது. 2015& ல் மிஸ்ஸ்க் போர் நிறுத்த உடன்படிக்கை கொந்தளிப்பை சற்று நிறுத்தியது.

அதிபர் போரோஷென்கோவின் இரண்டு முக்கிய போட்டியாளர்கள் – முன்னாள் பிரதம மந்திரி யூலியா ட்மோஷெங்கோவும், காமிக் நடிகருமான வோலோடைமர் ஜலன்ஸ்ஸ்கி – சமாதானப் பேச்சுவார்த்தைகளை வித்தியாசமாக அணுகி வருகின்றனர்.

இவர்கள் அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவார்கள் என மக்கள் நம்புகிறார்கள்.

ஆனால், அவர்களால் உக்ரைனின் மோதல் முடிவுக்கு வருமா என்பது குறித்த உறுதியான தகவல் ஏதும் இல்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.

எனினும், அமைதிக்காக வாக்களிக்க விரும்புவோர் மற்றும் வாக்களிக்கக்கூடியவர்களின் சமீபத்திய கருத்துக் கணிப்புக்களை வழிநடத்துகிறார் அரசியல் ஆய்வாளர் ஜலன்ஸ்ஸ்கி.

2014 ல் அதிகாரத்துக்கு வந்த போரொஷென்கோ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்தார். எதுவும் நடைபெறவில்லை. பாதுகாப்பு நிர்வாகத்தின் செலவினங்கள் குறைந்தபாடில்லை என்ற வருத்தமும் உக்கிரைன் மக்கள் மத்தியில் இருக்கிறது.

சில குடும்பங்கள் மோதல்களால் பிரிந்து போயுள்ளனர். அமைதிதான் எங்களுக்கு இப்போது உடனடியாக தேவை என்பதே உக்ரைன் மக்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.