சென்னை:
ரூ. 5 லட்சம் லஞ்ச புகாரில் சென்னை பொது கணக்காளர் அருண் கோயல், கஜேந்திரனை சிபிஐ கைது செய்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இங்கு பொதுக் கணக்காளராக அருண் கோயல் உள்ளார். தமிழக அரசின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரியான இவர் மீது ஊழல் புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.