நைன்வான்
ராஜஸ்தான் மாநிலம் நைன்வான் என்னும் இடத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
ராஜஸ்தான் நைன்வான் பகுதியில் உள்ள செண்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏ டி எம் ஒன்று உள்ளது. இந்த ஏ டி எம்மில் புகுந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தை பெயர்த்து பீரோவை நகர்த்துவது போல நகர்த்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை ஏ டி எம் மில் இருந்த சி சி டி வி காமிராவில் பதிவாகி உள்ளது. அந்த இயந்திரத்தில் சுமார் ரூ. 5 லட்சம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
சிசிடிவி பதிவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்