புதுடெல்லி:

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியின் சிறப்பான பணியை, மேஜையை தட்டி சோனியா காந்தி பாராட்டினார்.


மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தமது சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டிருப்பதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இங்குள்ள ஒவ்வொரு எம்பிக்கும் இது தெரியும் என்றார்.

உடனே ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். நிதின் கட்காரி பேசிக் கொண்டிருந்தபோது, அவரது பேச்சை ஆமோதித்து அவ்வப்போது புன்முறுவல் பூத்த சோனியா காந்தி, ஒரு கட்டத்தில் மேஜையை தட்டி மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதைப் பார்த்து, காங்கிரஸ் எம்பிக்களும் மேஜையைத் தட்டி பாராட்டினர்.

தமது தொகுதியான ரேபரலியில் சாலைப் போக்குவரத்து பிரச்சினையை தீர்த்து வைத்ததற்காக, மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு சோனியா காந்தி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.