புதுடெல்லி:

இந்திய வங்கிகளில் மோசமான கடன் நெருக்கடி காரணமாக பெரும் சோதனையான கால கட்டம் நெருங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அங்கீகரிக்கப்படாத சொத்து உத்தரவாதத்தின்பேரில், 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை (48.88 பில்லியன் டாலர்) இந்திய வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. இந்த கடன் புயல் தொழில் துறைக்கு பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவன இணை இயக்குனர் ஜிந்தால் ஹாரியா கூறும்போது, 3.5 லட்சம் கடன் தொகையை வழங்கிப் பெற்றதற்கான சொத்துகளில் பாதிக்குமேல் அங்கீகரிக்கபடாதவை.

2018-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில், ரூ. 14 லட்சம் கோடி வரை தரப்பட்ட கடன் தொகையில்,ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சொத்துகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

இது வங்கி வர்த்தகத்தில் பெரும் புயலாக வீசப் போகிறது. அதற்காக டைம் பாம் வைத்தாகிவிட்டது. அந்த டைம் பாம் வெடிக்கும் போது தொழில் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டில் வங்கிக் கடன் குறித்து அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.