முல்தான் நகர்
பாகிஸ்தானில் ஒரு பிச்சைக்காரர் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.
தற்போது பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. எனவே உலக நாடுகள் மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து நிதியுதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டுமென்றால் கூட அதிக விலையை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆயினும் இவ்வுளவு பணவீக்கத்திற்கு மத்தியிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளார்.
ஷவுகத் என்பவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் ஆவர். பெரும் பணக்கார பிச்சைக்காரரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார்.
அதே வேளையில் இவர் தனது குழந்தைகளை நாட்டின் மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். மேலும் அவர்களுக்கு ரூ.1 கோடி அளவிற்கு காப்பீடும் எடுத்துள்ளார். ஷவ்கத்துக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.