மெக்கா

ந்த ஆண்டு ஹஜ் பயணம் சென்ற 98 இந்தியர்கள் இயற்கையான காரணத்தால் உயிரிழந்ததாக வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உலகெங்கும் அதிக அளவில் வெப்ப அலை வீசி வருகிறதூ.  தற்போது சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.  இவர்களில் சுமார் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மரணம் அடைந்தோரில் 98 பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள்  என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  இவர்கள் அனைவரும் இயற்கையான காரணங்களால் உயிரிழந்ததாகவும் அமைச்சகம் கூறி உள்ளது