டில்லி

சென்ற வாரம் வெளியான நீட் தேர்வு முடிவுகள் மூலம் திறமை உள்ளவர்கள் எந்த இனத்தவராக இருப்பினும் முன்னேற முடியும் என்பது தெளிவாகி உள்ளது.

மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மட்டும் நடைபெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை ஒட்டி நடந்த நீட் தேர்வின் முடிவுகள் சென்ற வாரம் வெளியாகியது. இந்த மதிப்பெண்களில் உயர்வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் உள்ளிடோருக்கு குறைந்த பட்ச மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கபட்டுள்ளனர்.

நாடெங்கும் 7.97 லட்சம் மாணாவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் பலர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடி மாணவர்கள் ஆவார்கள். சாதி, இன வேறுபாடுகளை மீறி இவர்கள் திறமையால் மட்டுமே இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நாட்டின் பல இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை உயர்சாதி ஆசிரியர்கள் கேவலமாக நடத்தி வருவதாக செய்தி வரும் இவ்வேளையில் இந்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் கேசவ் குமார், “பொதுப் பிரிவு மாணவர்களுக்கு சமமாக பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவது வரவேற்கத் தக்கதாகும். ஆனால் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கல்லூரியில் பல இன்னல்களை நேர்கொள்கின்றனர்.

சமீபத்தில் மகாராஷ்டிர மாணவி ஒருவர் தனது கல்லூரியின் மூத்த வகுப்பின் உயர்சாதி மாணவிகள் கிண்டலால் தற்கொலி செய்துக் கொண்டுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.