திருவனந்தபுரம்:
கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும்  12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது.  பொதுத் தேர்வை, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணித்து  13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருப்பதாக கேரளா மாநில அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை பல்வேறு மாநில அரசுகள் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கேரளத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத மாநிலத்தில் 2 ஆயிரத்து 945 தேர்வு மையங்களும், லட்சத்தீவு மற்றும் வளைகுடா, மேல்நிலைப்பகுதியில் 2 ஆயிரத்து 45 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநில கல்வித்துறை பல்வேறு முன்னேறிபாடுகளை செய்திருந்தது. அதன்படி,  பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் 25 லட்சம் முக கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  மாணாக்கர்கள் அனைவருக்கும்  கொரோனா சோதனை செய்யும் வகையில், ஐஆர் தெர்மோமீட்டர்கள் மற்றும் 5 லட்சம் ஜோடி, கையுறைகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதி முடித்த  பிறகு, கையுறைகள் ஐ.எம்.ஏ உதவியுடன் சேகரிக்கப்பட்டு டிஸ்போஸ் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதையடுத்து, இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி  11 வகுப்பு  தொழிற்கல்வி மேல்நிலைத் தேர்வு தொடங்கியது. தேர்வை , 56 ஆயிரத்து 345 மாணவர்கள் எழுதினர்.

பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்ற  எஸ்.எஸ்.எல்.சி தேர்வை  4 லட்சத்து 22 ஆயிரத்து 450 மாணவர்கள் எழுதினர். நாளை நடைபெறும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வை,   4 லட்சத்து 704 பேர் எழுத  இருப்பதாக மாநில கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
காய்ச்சல் உள்ளிட்ட லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் கூட தனியாக அமரவைக்கப்பட்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.
கேரளாவிலும் கொரோனா பரவல் உள்ள நிலையில், மாநில அரசு திறமையாக தேர்வுகளை நடத்தி உள்ளது.
ஆனால், தமிழகத்திலோ மாணவர்களின் தேர்வுகளும் அரசியலாக்கப்பட்டு, அசிங்கப்படுத்தப்பட்டு வருவது கல்வியாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.