டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை 2 ஆகவே நீடித்து வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது.  உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய நிலையில், ஒன்றரை லட்சத்துக்கும்  மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா  வைரஸ் தொற்று வேகமாக  பரவி வருகிறது.  இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இதனை அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக,

மகாராஷ்டிரா மாநிலத்தில் 39 பேரும்,

கேரளாவில் 24 பேரும்,

உத்தரபிரதேச மாநிலத்தில் 13 பேரும்

டெல்லியில் 9 பேரும்,

கர்நாடகாவில் 8 பேரும்,

தெலங்கானாவில் 4 பேரும்,

லடாக்கில் 4 பேரும்,

ஜம்மு காஷ்மீரில் 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகம், ஆந்திரா, ஒடிசா, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியாணா மாநிலத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் 14 பேரும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.