டில்லி

ந்தியாவில் இதுவரை 12,95,91,786 கோடி கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணி முடிவடையாததால் பரிசோதனை, தனிமைப்படுத்தல் ஆகியவை பின்பற்றப்படுகின்றன.

இந்திய மருத்துவ ஆய்வுக் குழு அளித்த விவரங்களின் படி நேற்று வரை 12,95,91,786 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.  நேற்று மட்டும் 10,83,397 சோதனைகள் நடந்துள்ளன.

இதில் தமிழகத்தில் 1,13,33,206  கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.  நேற்று தமிழகத்தில் 67,115 சோதனைகள் நடந்துள்ளன.

[youtube-feed feed=1]