டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,325 ஆக உயர்ந்து 1,32,202 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 46,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 90,04,325 ஆகி உள்ளது. நேற்று 583 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,32,202 ஆகி உள்ளது. நேற்று 48,246 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 84,27,016 ஆகி உள்ளது. தற்போது 4,43,078 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 5,535 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,63,055 ஆகி உள்ளது நேற்று 154 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,356 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,860 பேர் குணமடைந்து மொத்தம் 16,35,971 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 79,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,849 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,67,780 ஆகி உள்ளது இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,604 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,800 பேர் குணமடைந்து மொத்தம் 8,30,988 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,169 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 1316 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,58,711 ஆகி உள்ளது இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,910 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,821 பேர் குணமடைந்து மொத்தம் 8,35,801 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,707 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,64,642 ஆகி உள்ளது இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,550 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,251 பேர் குணமடைந்து மொத்தம் 7,39,532 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 5,722 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,46,642 ஆகி உள்ளது இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,970 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,860 பேர் குணமடைந்து மொத்தம் 4,75,320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 68,234 பேர் சிகிச்சையில் உள்ளனர்.