டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71,73,565 ஆக உயர்ந்து 1,09,894 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 54,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 71.73,565 ஆகி உள்ளது. நேற்று 710 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,09,894 ஆகி உள்ளது. நேற்று 78,365 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 62,24,792 ஆகி உள்ளது. தற்போது 8,37,784 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 7,089 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,35,315 ஆகி உள்ளது நேற்று 169 பேர் உயிர் இழந்து மொத்தம் 40,514 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,656 பேர் குணமடைந்து மொத்தம் 12,81,896 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,224 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,58,951 ஆகி உள்ளது இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,504 பேர் குணமடைந்து மொத்தம் 7,08,712 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,606 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,17,915 ஆகி உள்ளது இதில் நேற்று 70 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,036 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 12,030 பேர் குணமடைந்து மொத்தம் 5,92,084 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,879 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,61,264 ஆகி உள்ளது இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,314 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,165 பேர் குணமடைந்து மொத்தம் 6,07,203 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,182 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,39,161 ஆகி உள்ளது இதில் நேற்று 44 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,438 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,342 பேர் குணமடைந்து மொத்தம் 3,93,908 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.