டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,14,137 ஆக உயர்ந்து 44,466 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 62,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 22,14,137 ஆகி உள்ளது.  நேற்று 1,013 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 44,466 ஆகி உள்ளது.  நேற்று 54,474 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 15,34,278 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,34,929 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 12,248 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,15,332 ஆகி உள்ளது  நேற்று 390 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,757 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,348 பேர் குணமடைந்து மொத்தம் 3,51,710  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,994 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது  இதில் நேற்று 119 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,927 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,020 பேர் குணமடைந்து மொத்தம் 2,38,638 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,820 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,27,560 ஆகி உள்ளது  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,036 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,097 பேர் குணமடைந்து மொத்தம் 1,38,712 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,985 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,78,087 ஆகி உள்ளது  இதில் நேற்று 107 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 3,198 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,670 பேர் குணமடைந்து மொத்தம் 93,908 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,300 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,427 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,225 பேர் குணமடைந்து மொத்தம் 1,30,687 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.