டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,67,153 ஆக உயர்ந்து 45,353 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 53,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 22,67,153 ஆகி உள்ளது.  நேற்று 887 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 45,353 ஆகி உள்ளது.  நேற்று 47,362 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 15,81,640 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,39,693 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 9,181 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,24,513 ஆகி உள்ளது  நேற்று 293 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,050 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,711 பேர் குணமடைந்து மொத்தம் 3,58,421  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,914 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆகி உள்ளது  இதில் நேற்று 114 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,041 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,037 பேர் குணமடைந்து மொத்தம் 2,44,675 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,665 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,35,525 ஆகி உள்ளது  இதில் நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,116 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,924 பேர் குணமடைந்து மொத்தம் 1,45,636 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,267 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,82,354 ஆகி உள்ளது  இதில் நேற்று 114 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 3,312 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,218 பேர் குணமடைந்து மொத்தம் 99,126 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 707 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,46,134 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,131 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,070 பேர் குணமடைந்து மொத்தம் 1,31,657 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.