இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரில் 70% பேர் ஆண்கள் : மத்திய அரசு

Must read

டில்லி

ந்தியாவில் கொரோனவால் மரணமடைவோரில் 70% பேர் ஆண்கள் என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 8.17 கோடி ஆக இருந்தது . இதில் 17.81 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று காலை வரை 5.78 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1.02 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில் 1.48 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 16,072 பேர் பாதிக்கப்பட்டு 250 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் 98.07 பேர் குணம் அடைந்து தற்போது சுமார் 2.70 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், “இந்தியாவில் கொரோனாவால் சுமார் 1.48 லட்சம்  பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் 70% பேர் ஆண்கள் ஆவார்கள்.  மீதமுள்ளோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.  இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனாவுடன் வேறு உடல் நிலை பாதிப்பு இருந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

More articles

Latest article