ஹரியானாவில் பசு பாதுகாவலர்களால் மாணவருக்கு கத்திக் குத்து!

ஹரியானா

ரியானாவில் பசு காவலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, தங்களைப் புகைப்படம் எடுக்காத ஒரு மாணவரை, பத்திரிகை நிருபர் என தவறாக நினைத்து பசு காவலர்களால் கத்தியால் குத்தப் பட்டார்.

ஹரியானாவின் பசுக் காவலர்கள் என அழைக்கப்படும் கௌ ரக்‌ஷா சேவா தள் சேர்ந்த தொண்டர்கள் போராட்டம் நடைபெற்றது.

கேரளாவில் காங்கிரஸாரால் நடுத்தெருவில் பசுமாடு ஒன்று கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமீபத்திய மத்திய அரசு சட்டமான, இறைச்சிகாக மாடுகள் விற்கப்படக்கூடாது என்னும் சட்டத்திற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடந்த்தினர்

அப்போது அந்தக் ஆர்ப்பாட்டத்தைக் காண தனது பத்திரிகையாள நண்பருடன்  பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் சிவம் என்னும் மாணவர் சென்றுள்ளார்.

தனது நண்பரின் காமிராவை அவர் கையில் வைத்திருந்தார்.  அவரை பத்திரிகை புகைப்படக்காரர் என தவறாகப் புரிந்துக் கொண்ட பசுக் காவலர்கள் தங்களின் ஆர்ப்பாட்டத்தை புகைப்படம் எடுக்கு மாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

தான் புகைப்படக்காரர் இல்லை என்பதை சொல்லாமல், புகைப்படம் எடுக்க சிவம் மறுத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர், ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாணவரைப் பின் தொடர்ந்து, சென்று சண்டையிட்டு, அவரை நெஞ்சு, மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர்.

படுகாயமடைந்த மாணவரை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்த போலீசார், மேல் சிகிச்சைக்காக டில்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட  மோகித் என்ற பசு பாதுகாவரை போலீசார்  கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்ற இருவர் தப்பித்து ஓடி விட்டனர் . இதுகுறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த, இந்த தாக்குதலில் ஈடுபட்ட மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 


English Summary
In Haryana, the student attacked by the cow protectors!