சென்னை

டைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

நடைபெற உள்ள மக்களவை தொகுதியில் காங்கிரசுக்கான இட ஒதுக்கீடு பற்றி நேற்று டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக சார்பில் கனிமொழி பேச்சு வார்த்தை நடத்தினார் அதை தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின், “திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதி தமிழக மக்களவை தொகுதிகள் ஆகும். 1 தொகுதி பாண்டிச்சேரி மக்களவை தொகுதி ஆகும்.” என தெரிவித்துள்ளார்.