புதுடெல்லி:

சர்வதேச பாதுகாப்புப் படையில் பணியாற்ற இந்தியாவின் முப்படையிலிருந்து வெளிநாட்களுக்கு படையினரை அனுப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.


வாஷிங்டன் மற்றும் பஹ்ரைனில் சர்வதேச படைப்பிரிவில் இந்திய விமானப் படைக்கான காலியிடம் நிரப்பப்படவில்லை.

அமெரிக்காவில் இந்தோ-பசிபிக் கமாண்டர், சிவப்பு கடல், ஓமன் வளைகுடா, மற்றும் அரேபிய கடற்பரப்புக்கான அமெரிக்க மத்திய கமாண்டர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.

ராணுவத்திலிருந்து 31 பேரும், விமானப் படையிலிருந்து 19 பேரும், கப்பற் படையிலிருந்து 17 பேரும் அனுப்ப வேண்டும்.
இதற்கான ஆட்களை தேர்வு செய்வதில் முப்படைகளுக்கும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மத்தியிலும் குழப்பம் நீடித்து வருகிறது.

எனினும் முப்படைத் தளபதிகள் இணைந்து முடிவு செய்தால், சர்வதேச பாதுகாப்பில் நமது பிரதிநிதித்துவம் விரைவில் உறுதி செய்யப்படக் கூடிய வாய்ப்புள்ளது.