ஜெனிவா

ரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரைஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனாவால் 18.29 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 39.62 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  சுமார் 16.75 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 1.14 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.   தவிர உலகெங்கும் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.  இவை ஆல்பா, பீடா மற்றும் டெல்டா என்னும் பெயர்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய புள்ளி விவரங்களின்படி சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, ஆல்பா மாறுபாட்டின் பாதிப்புகள் 172 நாடுகளிலும் 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும் 72 நாடுகளில் காமா  வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா வகை பாதிப்புகளும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது   தற்போதைய பாதிப்பு கடந்த வாரத்தை விட  11 நாடுகளில்  அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது ஜூன் 29, 2021 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு தனது  கொரோனா வாராந்திர தொற்று நோயியல் அறிக்கையில்  96 நாடுகள் டெல்டா வகை கொரோனா  வைரஸ் பாதிப்பு குறித்துத் தெரிவித்து உள்ளன.  இந்த 96 நாடுகளில் வரும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.